நுண்பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தெறிவு முறையில் பணி ஒதுக்கீடு
வாக்கு சாவடி
சிதம்பரம்(தனி)மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நுண்பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தெறிவு முறையில் சட்டப் பேரவைத் தொகுதி பணி ஒதுக்கீடு செய்யும் பணி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்ôய்க்கிழமை நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகுட் பட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் தொகுதி ஒதுக்கீடு நடைபெற்றது. 110 நுண்பார்வையாளர்களுக்கு சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு வாக்குப் பதிவினை கண்காணிப்பார்கள் என மாவட்ட தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பரமணியன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.