கஞ்சா பறிமுதல்
ராணிப்பேட்டையில் வாலிபர் ஒருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாமலைகாரை கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்து சோதனை செய்த போது அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபரிடம் தீவிரமாக நடத்திய விசாரணையில் காரை பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்பவரும் கஞ்சா விற்பனை செய்து வருவது என தெரியவந்தது. மேலும் மறைத்து வைத்திருக்கு கஞ்சவை போலிசார் பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிரதீப்குமார் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதுபோல தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் விரைந்து கைது செய்து கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..