உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 1,60,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதணைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் , ஆற்றுப்பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் வேனில் எடுத்து வந்த 1லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் மற்றும் தாசில்தார் மாரிமுத்துவிடம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story