திமுகவை தீண்டி பார்க்கும் காங்கிரஸ்.. சலசலப்பை ஏற்படுத்திய செல்வப் பெருந்தகை!

திமுகவை தீண்டி பார்க்கும் காங்கிரஸ்..  சலசலப்பை ஏற்படுத்திய செல்வப் பெருந்தகை!

செல்வப் பெருந்தகை!

பொறுத்திருந்தது போதும் இன்னும் எத்தனை காலம்தான் கையேந்தி நிற்பது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, " 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். 1967ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஏமாந்து கொண்டு வருகிறோம். தேர்தலின் போது தொகுதிகளை கையேந்தி கேட்கும் நிலையில் இருந்து மாறி தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். 57 ஆண்டுகள் நாம் அமைதி காத்திருந்தோம். இந்த நிலை மாற வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் வளர வேண்டும். அதற்காக நிர்வாகிகள் பாடுபட வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இனியும் நாம் அமைதியாக இருந்தால் மீண்டும் கையேந்தி நிற்கும் நிலை தான். ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சட்டப்பேரவை தேர்தலில் மாற்றத்தை உண்டாக்குவோம். எவ்வளவு காலம் மற்றொரு கட்சி இடம் எங்களுக்கு தகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது? ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரித்து கொடுத்தோம் இப்பொழுது தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையை மாற்ற உறுதியாக அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும். " என பேசினார்.

Tags

Next Story