செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி துவக்கம் !

செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி துவக்கம் !

பவளப்பாறை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்து மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் ரூ.11.30 கோடி மதிப்பீட்டில் செயற்கைப் பவளப்பாறைகள் அமைக்கும் பணியில் செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டுசெல்லும் பணி துவக்கம்.
தமிழக கடற்கரைப் பகுதிகளில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய ஐந்து மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் 11.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்டமாக தருவைகுளத்திலிருந்து கடல்மார்க்கமாக விசைப்படகு மூலமாக சிங்கித்துறை மீனவக் கிராமத்திற்கு செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டுசெல்லும் பணியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தருவைகுளம் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. .இதில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் சமச்சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கக்கூடியவராக குறிப்பாக மீனவ சகோதரர்களை நேசிக்கக்கூடியவராக விளங்கி வருகிறார்கள். மீனவர்களின் நலனைக் காப்பதற்காக மீன்வளத்துறை என்று இருந்த பெயரை மீன்வளம் - மீனவர் நலத்துறை என்று பெயரை மாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாத வகையில் இராமநாதபுரத்தில் மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மீனவர் நல மாநாடு நடத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் அந்த மாநாட்டில் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறும் வயது வரம்பு 60 வயது என்று இருந்ததை மாற்றி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் காலம்வரை மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். மேலும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000 ஆக இருந்தை ரூ.8,000 ஆக உயர்த்தி அறிவித்தார்கள். மீனவர்கள் வளர்ச்சி பெற தூண்டில் வளைவு உள்ளிட்ட அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி 5 வருட காலத்தில் மீனவர்களுக்கு எந்தவித குறையும் இல்லாத வகையில் செயல்பட உத்தரவிட்டுள்ளார்கள். என தெரிவித்தார் தமிழக கடலில்மீன்வளத்தை மேலும் பெருக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில், 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் நிறுவ ரூ.62.00 கோடி திட்ட மதிப்பிட்டில் செயற்கை பவழைப்பார்கள் நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story