இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

பைல் படம் 

இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2021 2022, 2022 2023 மற்றும் 2023 2024 ஆம் நிதியாண்டுகளில் சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிறைவு பெற்ற பணிகளை தவிர இதர பணிகளின் தற்போதைய பணி முன்னேற்றம் குறித்தும், 2024-2025 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்தும் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் பேசுகையில், கடந்த நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் பணிகளை கால நிர்ணயம் செய்து துரிதமாக முடித்திட வேண்டுமெனவும். நடப்பாண்டில் அறிவிக்கப்படும் புதிய அறிவிப்புகள் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களின் நலன் சார்ந்த வகையிலும் வடிவமைத்திட வேண்டுமெனவும் அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story