குமரியில் தொடர் கனமழை - ஆறாக மாறிய சாலைகள்.

குமரியில் தொடர் கனமழை - ஆறாக மாறிய சாலைகள்.
X
சாலையில் காடாற்று வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் தற்போது உயர்ந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மலையோர கிராமப் பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பேச்சிப்பாறை அணை பகுதி மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதியில் கன மழையால் மூக்கரைக்கால் பகுதியில் உள்ள சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் நடந்து சென்ற மக்கள் ஒருவருக்கொருவர் கையை மற்றவர் பிடித்தபடி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனச் சென்றவர்கள் நிறுத்தி நிதானமாகவே சென்றனர். கோதையாறு, மோதிரமலை, குட்டியாறு போன்ற பகுதிகளிலும் சாலைகளை மூழ்கடித்த படி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

Tags

Next Story