2ஆம் கட்ட மெட்ரோ மின் மற்றும் இயந்திரம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம்

2ஆம் கட்ட மெட்ரோ மின் மற்றும் இயந்திரம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம்

கோப்பு படம் 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை 22 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் மின்சாரம்,

தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.137.86 கோடி மதிப்பில் Universal MEP Projects & Engineering Services நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), Universal MEP Projects & Engineering Services நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுத் தலைவர் ஜெயந்த் தேஷ்பாண்டே மற்றும் தென் மண்டலத் தலைவர் பிப்லாப் சட்டோபாத்யாய் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் எஸ்.ராமசுப்பு, எஸ்.கே. நடராஜன், கூடுதல் பொது மேலாளர் கே.ரவிக்குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் Universal MEP Projects & Engineering Services நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story