அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகனங்கள் போராட்டம்
பைல் படம்
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகனங்கள் சார்பில் வாகனங்கள் இயக்காமல் போராட்டம். அண்மையில் பெட்ரோல் டீசல் விலை தலா இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டதை அடுத்து ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய தொகையை குறைத்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப பணம் பட்டுவாடா செய்வது வழக்கமாக இருக்கும் நிலையில் திடீரென இரண்டு ரூபாய் குறைத்ததால் அம்பத்தூரில் லாரி ஒப்பந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 17லட்சம் குறைவாக கொடுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நேற்று 7 மணி அளவில் வாகனங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டதால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்படும் என அஞ்சப்பட்டது.
இரவு 10 மணி அளவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் ஆவின் நிர்வாக சார்பில் மாற்று வாகனங்களிலும் பால்விநயோகம் மேற்கொள்ளப்பட்டது.