சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான் - சுகாதாரத்துறை நோட்டீஸ் !!!
யூடியூபர் இர்பான்
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.
பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.