சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: ஆளுநர் பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: ஆளுநர் பங்கேற்பு

பட்டம் வழங்கிய ஆளுநர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 44,781மானவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பெரியார் கலை அரங்கில் நடைபெற்றது. துணை வேந்தர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.

விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். முனைவர் பட்டம் ஆய்வை நிறைவு செய்த 153 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வில் நிறைஞர் முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை கவர்னர் ரவி வழங்கினார்.

இதில் பெரியார் பல்கலைக்கழகத் துறையில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 31 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும், தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களின் கவர்னர் ரவி வழங்கினார். மேலும் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42 ஆயிரத்து 915 மாணவர்களும்,

பெரியார் பல்கலைக்கழக துறையில் படித்த 978 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் படித்த 631 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். கவர்னர் ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story