சேலம் சோனா தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 1,331 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் வழங்கினார்.
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 22-வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள வள்ளியப்பா கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் வரவேற்று பட்டமளிப்பு அறிக்கையை சமர்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கலந்து கொண்டு 25 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 42 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 1,331 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:- சிறப்பான கல்வி சேவையை அர்ப்பணித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகள். சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால் தான் பல விருதுகளை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி தலைவர் வள்ளியப்பா பேசும் போது, சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும்’ என்றார். இதில் சோனா கல்விக்குழுமத்தின் முதல்வர்கள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story