கூல்டிரிங்ஸ் குடித்து குழந்தை இறக்கவில்லை; கூல்டிரிங்ஸ் நிறுவனம் ஆதாரத்துடன் புகார்!!

கூல்டிரிங்ஸ் குடித்து குழந்தை இறக்கவில்லை; கூல்டிரிங்ஸ் நிறுவனம் ஆதாரத்துடன் புகார்!!

dailee cooldrinks complaint

திருவண்ணாமலையில் டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவன ஜூஸை குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறிய சிறுமியின் தந்தை மீது அந்நிறுவனம் ஆதரத்துடன் புகாரளித்துள்ளது.

நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டெய்லி கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனது கிளைகள் மூலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு கூல் ட்ரிங்க்ஸ் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் கனி கிலுப்பை கிராமத்தில் 5 வயது சிறுமி காவியா ஸ்ரீ டெய்லி கூல்ட்ரிங்க்ஸ் குடித்து இறந்து விட்டதாக சிறுமியின் தந்தை ராஜ்குமார் என்பவர் அவதூறு செய்தியை பரப்பி உள்ளார். இதனால் டெய்லி கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனம் பல கோடி இழப்பை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை நேஷனல் புட் லேபட்டரி, சென்னை இன்ட்ரஸ்ட் டெஸ்டிங் சென்டர் உள்ளிட்ட லேப்களில் கூல்டிரிங்ஸ் ஆய்வு செய்ய கொடுத்தனர். இதனை தொடர்ந்து கூல்டிரிங்ஸ் தரமாக உள்ளதாக அறிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அறிக்கையுடன் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தூசி காவல் நிலையத்தில் டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவதூறு பரப்பிய பரப்பிய கனிக்கிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மீது கிரிமினல் அவதூறு மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story