குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் சேவை இன்று ரத்து!
குன்னூர் பகுதியில் நேற்றிரவு பெய்த கன மழையால் பாறைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நீலகிரி உட்பட சில மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு அதி கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யும் என நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதில் குன்னூர் - மேட்டுபாளையம் மலை ரயில் பாதை ஹில் குரோவ் என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தது. இதனால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்த நிலையில் மேட்டுபாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் மலை ரயிலில் பயணிக்க முன்பதி செய்த சுற்றுலா பயணிகளுக்கு பணம் திருப்தி கொடுக்கப்படும் என தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. ஊட்டி - குன்னூர் மலைரயில் சேவைகள் வழக்கம் போல செயல்படும்.