ஜாதியை மறைத்து போட்டியிட்ட கவுன்சிலர் செயல்பட தடை

ஜாதியை மறைத்து போட்டியிட்ட கவுன்சிலர் செயல்பட தடை

ஷாலினி

ஜாதியை மறைத்து மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கவுன்சிலராக செயல்பட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை 27வது வார்டில், 2022 நகர்ப்புற தேர்தலில் தென்னை மரம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவர் ஷாலினி, 30. இவரை எதிர்த்து, விஜயகுமாரி என்பவர் போட்டியிட்டார். தேர்தலில், ஜாதியை மறைத்து போட்டியிட்டு ஷாலினி வெற்றி பெற்றதாக, விஜயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நத்தப்பேட்டை 27வது வார்டு, தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டு. அந்த வார்டில், வன்னியரான ஷாலினி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர், தொடர்ந்து செயல்படக் கூடாது' என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம், மாவட்ட நீதிமன்றம் எண் இரண்டின் நீதிபதி செம்மல் முன், விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, 27வது வார்டு கவுன்சிலராக ஷாலினி செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Tags

Next Story