கடற்கரை பூங்கா வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு.
மெரினா கடற்கரை (பைல் படம்)
இரவில் கடற்கரை பூங்காக்களுக்கு வரும் மக்களை துரத்தக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9:30 மணிக்கு மேல் காவல் துறையினர் துரத்தி விடுவதாக புகார் தெரிவித்து சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து தமிழக டி.ஜி.பி, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story