மாடு கடத்தல் : காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சுங்கசாவடிகளுக்கு உத்தரவு
பைல் படம்
உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில், இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்படும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சுங்கசாவடிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இறுதி விசாரணைக்காக வழக்கு ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.