வட மாநிலத்தில் வெப்ப அலை தான் மோடி அலை அல்ல - சிபிஎம் கட்சி ஜி ராமகிருஷ்ணன்
சிபிஎம் ராதாகிருஷ்ணன் பேட்டி
அரியலூர் மாவட்டம், செந்துறையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 2019 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள் இந்த தேர்தலில் அந்த 29 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதியில் பாஜக தோல்வியடையும். வட மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று மாநிலங்களில் பாஜக பலமாக உள்ள உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 2019 வெற்றி பெற்ற எண்ணிக்கையில் தொகுதிகளின் எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாது அதில் பெருமளவு சரிவு ஏற்படும் என்பது ஊடகங்களில் வரக்கூடிய செய்தியாக உள்ளது.
குறிப்பாக ஆங்கில நாளேட்டில் தேர்தலில் வெப்பத்தின் அலை தான் உள்ளது தவிர மோடி அலை இல்லை என பாஜகவிற்கு ஆதரவான நாளிதழ் கட்டுரை எழுதி உள்ளது. டெல்லி முதலமைச்சர் ஜார்கண்ட் முதலமைச்சர் கைது தொடர்ச்சியாக இரண்டாவது கட்டம் மூன்றாவது கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் எந்த அளவிற்கு பதற்றத்தில் பயந்து போய் பேசுகிறார்கள் என்பது தெரிகிறது. தேர்தலில் பாஜக 100 அல்லது 150 தொகுதிகளை கூட தாண்டாது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை இதிலிருந்து தெரிகிறது.
நதிநீர் பிரச்சனையை பொருத்தவரை ஏற்கனவே முல்லைப் பெரியாறு மற்றும் காவேரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு நலனை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டிற்கு வரும்போது தமிழர்களை பெருமையாக பேசக்கூடிய பிரதமர் வேறு மாநிலங்களில் தமிழர்களை அவதூறாக பேசுவதன் மூலம் மோடி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது தெளிவாகிறது.
தமிழ் மொழி மூத்த மொழி என பெருமையாக பேசுவார் ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் போது தமிழக மக்கள் வட மாநில மக்களை இழிவு படுத்துகிறார்கள் இந்தியை இழிவு படுத்துகிறார்கள் என அப்பட்டமாக பொய் பேசுகிறார் முன்னுக்கு முன் முரணாகவும் பதற்றமாகவும் பிரதமர் பேசி வருகிறார் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததெல்லாம் சொல்லியதாக கூற முயற்சி செய்கிறார்.
இதனால் பாஜக படுதோல்வி அடையம் என்பது தான் எனது கருத்து. திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிந்து இருப்பது போல கவர்னர் வெளியிட்டு பாஜகவின் பிரதிநிதியாக கவர்னர் செயற்படுகிறார் இங்கு வந்தால் தமிழைப் பற்றியும் வட மாநிலங்களில் தமிழர்களை தாக்கி பேசுவதும் மக்கள் மத்தியில் அம்பலமாகி உள்ளது இது இனிமேல் எடுபடாது பூரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழகத்தில் உள்ளது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எதையாவது சொல்லி ஓட்டு பெற்று விடலாம் என பிரதமர் முயற்சி செய்கிறார் அது ஒருபோதும் எடுபடாது என கூறினார்.
மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக உள்ள செய்தி குறித்து கேட்டபோது ஏற்கனவே ஏற்றப்பட்ட மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் எனவே வரும் காலங்களில் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தினால் அது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என கூறினார்.