''நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள் குறைய வேண்டும் உரிமையியல் வழக்கு அதிகமாக வேண்டும்'' - உச்ச நீதிமன்ற நீதிபதி
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா ,உயர் நீதிமன்ற நீதிபதிகள்,வழங்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை கோரி மூத்த வழங்கறிஞர் மோகன் வழக்கு தொடர்ந்து இருந்தார் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மேடையில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ''உயர்நீதிமன்றத்தின் பெருமை அறத்தின் சார்ந்த செயல்பாடுகள் மூலம் வரும்.
நீதிமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அங்கு பணிப்புரியும் பணியாளர்களின் வாழ்க்கை சிறப்பானதாக இருக்க வேண்டும்.
நிகழ்காலம் என்பது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைப்பது. அவற்றோடு சேர்ந்து அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றி வரும் தலைமை நீதிபதிக்கும் பாராட்டு
நீதிமன்ற கட்டிடம் எதற்காக? ஒரு கட்டிடத்தின் மதிப்பு அதன் செயல்பாடு குறித்தது.
நீதிமன்றங்கள் பெருகுகின்ற பொழுது அது சமுதாயத்திற்கு நீதி துறை மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
இது போல் பல கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். இந்தியா முழுவதும் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என பாராட்டப்பட வேண்டும்.'' என்றார்.