சொகுசு கார் முற்றிலுமாக பழுது: நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

சொகுசு கார் முற்றிலுமாக பழுது: நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

கோப்பு படம் 

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சொகுசு காரை எடுத்துச் செல்வதற்காக வந்த டாட்டா நிறுவனத்தின் டெரிக் கார் சர்வீஸ் நிறுவன ஊழியர்கள் முறையாக கையாளதால் 21 லட்ச ரூபாய் மதிப்பான சொகுசு கார் முற்றிலுமாக பழுது உரிய இழப்பீடு தர மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி சுப்பையா முதலியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய செல்வன் வழக்கறிஞர் இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு டாட்டா நிறுவனத்தில் சுமார் 21 லட்ச ரூபாய் செலுத்தி சொகுசு காரை புதிதாக வாங்கியுள்ளார் இந்த சொகுசு காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 தேதிகளில் பெய்த பெருமழை மற்றும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது இதில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சேதம் ஆகின இதில் வழக்கறிஞர் ஜெயசெல்வனின் காரும் பழுதாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள tata நிறுவனத்தின் கார் பழுது நீக்கும் நிறுவனமாக டாட்டா மோட்டார்ஸ் டெரிக் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தனது கார் மழை நீரில் பகுதி அளவு மூழ்கியுள்ளது எனவே இதை சர்வீஸ் செய்து தர ஆட்களை அனுப்புமாறு கூறியுள்ளார் இதை தொடர்ந்து டாட்டா மோட்டார்ஸ் டெரிக் நிறுவனம் கார் சர்வீஸ் செய்யும் ஊழியர்கள் வந்து காரை பார்த்த பின்பு தண்ணீர் லேசாக காரின் இன்ஜினில் இருந்துள்ள நிலையில் காரை சாவி போட்டு இயக்கினால் முற்றிலுமாக கார் பழுது ஆகிவிடும் என்பதை தெரிந்தும் தவறான முறையில் காரை சாவி போட்டு ஆன் செய்து இயக்கி உள்ளனர்.

இந்நிலையில் கார் 100 மீட்டர் தூரம் சென்று நிலையில் பழுதாகி நின்றதுடன் முற்றிலும் சேதம் ஆகி உள்ளது இதைத்தொடர்ந்து கார் சர்வீஸ்நிறுவனத்திற்கு மற்றும் டாட்டா நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு ஜெயசெல்வன் பேசியுள்ளார் எந்தவித பொறுப்பான பதில்களும் அளிக்காத நிலையில் காருக்குரிய முழு இன்சூரன்ஸ் தொகை கட்டிய நிலையில் அதற்கான பணம் 16 லட்சம் ரூபாய் மட்டும் கிடைத்துள்ளது கார் வாங்கி 3 மாதங்களை ஆன நிலையில் கார் சர்வீஸ் நிறுவனம் முறையாக சர்வீஸ் செய்யாததால் கார் பழுதாகி முற்றிலும் சேதமானதால் தனக்கு சுமார் ஆறு லட்ச ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதை கார் சர்வீஸ் நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் கார் சர்வீஸ் நிறுவன மேலாளர் இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறி உள்ளனர் இதைத்தொடர்ந்து கார் நிறுவனத்தை நேரடியாக சென்று அணுகிய ஜெயசெல்வன் தனக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் இந்த டாட்டா டெரி கார் சர்வீஸ் நிறுவனம் இதுபோன்று தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தார் மேலும் இந்த கார் சர்வீஸ் நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும்,

அவர் கூறினார் இதைத் தொடர்ந்து அங்கிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவன மற்றொரு மேலாளரிடம் கேட்ட போது இந்த சம்பவம் தங்களுக்கு தெரியாது தெரிந்திருந்தால் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்திருப்போம் என அவர் தெரிவித்தார்

Tags

Next Story