ஊட்டி பெண் காவல் ஆய்வாளர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைமில் புகார்

ஊட்டி பெண் காவல் ஆய்வாளர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைமில் புகார்

ஊட்டி பெண் காவல் ஆய்வாளர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைமில் புகார்

சவுக்கு சங்கர் மீது பெண் காவல் ஆய்வாளர் ஊட்டி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்

சென்னையை சேர்ந்தவர் சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி, பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூ-டியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அண்மையில் தனியார் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடந்த 4-ம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து கைது செய்தனர். மேலும் சென்னை, சேலம், திருச்சியில் பெண் போலீஸார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி புதுமந்து காவல் ஆய்வாளர் அல்லிராணி, ஊட்டி சைபர் கிரைம் போலீஸில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story