தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு

செயற்குழு கூட்டம் 

மக்களவை தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர், அறிவித்துள்ளனர்.

விழுப்புரம் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் மேரிஜான் தலைமை வகித்தார். பொதுச்செயலர் தானியேல், பொருளாளர் சந்தனதுரை, மாநில நிர்வாகிகள் சலேத்தையன், அமலோற்பவதாஸ், ஆனந்தராஜ், பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தனர்.

தலித் கிறிஸ்தவர்களுக்கு, மத்திய அரசு, பட்டியல் இனத்தவர்(எஸ்.சி) உரிமையை வழங்காத நிலையில், தமிழகத்தில் பிற்பட்ட வகுப்பினருக்கான (பி.சி) இடஒதுக்கீடில், தலித் கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 4.6 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இத்தேர்தலில் வெற்றி பெறும் மதச்சார்பற்ற கூட்டணி எம்.பி.,க்கள், தலித் கிறிஸ்தவர் பட்டியல் இன உரிமைக்கு, நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Tags

Read MoreRead Less
Next Story