மின் கம்பி உரசி கண்டெய்னர் லாரி சேதம்!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில ராணுவ அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஆர்.சி.யில் பயிற்சி பெற வந்தனர். இதற்காக உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரிகள் மைசூர் வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள்வந்து குன்னூர் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் முதலில் வந்த 4 கண்டெய்னர் லாரிகள் ஹில்பங்க், சேரிங்கிராஸ் வழியாக குன்னூர் சென்றுவிட்டன. ஆனால் கடைசியாக வந்த ஒரு லாரி வழிமாறிவிட்டது. இதன்படி ஹில்பங்கில் இருந்து ஜெய்சாந்தி வந்து விட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து பஸ் நிலையம் வந்து அங்கிருந்து அரசு மருத்துவமனை சாலை வழியாக மீண்டும் பழைய காவல் நிலைய அலுவலக ரவுண்டானா சென்று குன்னூர் சொல்ல லாரி டிரைவர் திட்டமிட்டார். ஆனால் அரசு மருத்துவமனை சாலையில் வரும்போது எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விட முயற்சி செய்தபோது லாரியில் மேற்புறத்தில் மின் கம்பிகள் உரசின. இதனால் லாரிக்குள் இருந்த பொருட்களில் தீ பிடித்தது. இதில் கட்டில், மேஜை போன்ற பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
தண்ணீர் ஊற்றியதால் உள்ளே இருந்த அட்டை உள்ளிட்ட பொருட்கள் வீணானது. ஆனாலும் தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதுகுறித்து லாரி டிரைவரிடமும் லாரியில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸார் ஒருவரிடமும் நீலகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். .......