பங்காரு அடிகளார் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு- அன்புமணி

பங்காரு அடிகளார் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு- அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

பங்காரு அடிகளாரின் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பங்காரு அடிகளார் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு என்றார். ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளார். மேலும், கருவறையில் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பெண்கள் கருவறையில் செல்லலாம் என புரட்சி செய்தவர் , பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர், தொடர்ந்து பல மன்றங்களை துவங்கி பெண்களை தலைவராக்கினார். உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும்; அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய புகழ், ஆசிர்வாதம் என்றும் மறையாது என்றார் . மேலும் இன்று மேல்மருவத்தூர் செல்வதாகவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story