வன பகுதிக்குள்  மக்னா யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

வன பகுதிக்குள்  மக்னா யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

மக்னா யானை உயிரிழப்பு

கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட பகுதிகளில் விலைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோவை பகுதியில் விட்டனர். சில தினங்கள் வனப்பகுதியில் இருந்த மக்னா யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விலைநிலங்களை சேதப்படுத்தியது.அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து யானையை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.யானையை டாப்ஸ்லிப் யானைகள் முகாம் பகுதி கொண்டு செல்லபட்டு ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதிக்குள் விடப்பட்டது. சில தினங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சேத்துமடை சர்க்கார்பதி,சரளபதி,ஆனைமலை, கோவை போன்ற பகுதிகளில் சுற்றி குடியிருப்பு பகுதியில் சுற்றியது யானையை மீண்டும் வனத்துறையினர் பிடித்து மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற இடத்தில் விடுவித்தனர்.யானை மீண்டும் சில தினங்களில் ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை, சர்க்கார்பதி,சராளபதி போன்ற இடங்களில் புகுந்து விலைநிலங்களை சேதப்படுத்தியது.மக்கள் போராட்டம் நடத்தி யானையை மீண்டும் பிடிக்க வலியுறுத்தினர்.யானையை மீண்டும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் சிறிது காலம் வால்பாறை சுற்றுவட்டாரத்திலே சுற்றி வந்தது.வால்பாறை அருகே உள்ள சக்தி எஸ்டேட் வனப்பகுதியில் யானை நன்றாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று வால்பாறை வன சரகத்துக்கும் பொள்ளாச்சி வன சரகத்துக்கும் இடையில் உள்ள வன பகுதியில் யானை இறந்து இருப்பதாக வனப்பகுதிக்கு பணிக்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனைமலை கள இயக்குனரிடன் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் யானை பாறையில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து இறந்ததாகவும் இறந்து சில தினங்கள் இருக்கும் என தெரிவித்தனர்.மேலும் இன்று உடல் கூறு ஆய்வுக்கு பின்னரே மக்னா யானை இறந்தது குறித்து விவரம் தெரிய்ம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story