மானிய கோரிக்கை மீதான விவாதம் - ஜூன் 20ல் கூடும் சட்டபேரவை

மானிய கோரிக்கை மீதான விவாதம் -  ஜூன் 20ல் கூடும் சட்டபேரவை

சபாநாயகர் அப்பாவு 

மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஜூன் 20 ஆம் தேதி இரங்கல் தீர்மானத்துடன் தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வருகின்ற 20 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

சபாநாயகர் அப்பாவு அலுவல் ஆய்வு கூடத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர் புகேழ்ந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஜூன் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு, பேரவை கூடும். ரூல்ஸ் கமிட்டியில் முடிவு எடுத்தபின் காலை 9:30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம், அது அன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு அடுத்த நாள் முதல் அமலுக்கு வரும்.

காலை 9:30 மணி முதல் 1:30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இறுதி நாள் மட்டும் மாலை இல்லை. கிட்டத்தட்ட 16 அமர்வுகள் இருக்கும். 1996 இல் கலைஞர் முதல்வராக இருந்த போது காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இருப்பதன் காரணமாகவே ஜூன் 24 ஆம் தேதி நடைபெற இருந்தது முன்கூட்டியே நடத்தப்படுகிறது. அனைத்து கட்சியினரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். நாடாளுமன்றத் தேர்தலின் போதே விக்கிரவாண்டி தேர்தலும் வைத்திருக்கலாம் அப்படி வைக்காமல் இருப்பதால்தான் இந்த பிரச்சனை வருகிறது. 45 முதல் 50 நாட்கள் தேர்தல் நடக்கிறது அப்போதே இந்த தேர்தலும் நடத்தி இருக்கலாம் தற்பொழுது மீண்டும் தேர்தல் நடைமுறைகள் வருகிறது என்றார்.

Tags

Next Story