முதல்வர் குறித்து அவதூறு - பாஜக பிரமுகர் கைது

முதல்வர் குறித்து அவதூறு - பாஜக பிரமுகர் கைது

பாஜக பிரமுகர் ஜான் ரவி 

தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜான் ரவியை மதுரை மாநகர் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி,பாஜக பிரமுகர். ஜான் ரவி தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது .இதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறையில் ஜான் ரவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதைத்தொடர்ந்து நேற்று ஜான் ரவியை மதுரை மாநகர போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.


Tags

Next Story