முதல்வர் குறித்து அவதூறு - கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி ஆஜர்

முதல்வர் குறித்து அவதூறு - கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்.பி ஆஜர்
சி.வி.சண்முகம் எம்.பி கோர்ட்டில் ஆஜர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நாட்டார்மங்கலம் பஸ்நிலையம் அருகில் கடந்த 7.3.2023 அன்றும், வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்றும் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு, தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்குகள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் ஆஜரானார், தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் சி.வி.சண்முகம் எம்.பி. சார்பில் முன்னாள் அரசு வக்கீல்கள் சங்கரன், ஜெயப்பிரகாஷ், தமிழரசன், ராதிகா செந்தில் ஆகியோர் ஆஜராகினர்.

Tags

Next Story