அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க தாமதம்.!!

அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க தாமதம்.!!

அரசு மருத்துவமனையில் அலட்சியம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்த போது வயிற்றில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி உள்ளார். அதற்கு பாத்திமாவும் தயாராகி உள்ளார். அந்த மருத்துவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் காலதாமதம் ஆகும் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு பாத்திமாவும் எனக்கு அதற்கான வசதி இல்லை எனவும், அதற்கான அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவர் கூறிய தேதியில் பாத்திமா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். மருத்துவர் குறிப்பிட்ட நாளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறிய தேதியில் அறுவை சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்திக்கொண்டே சென்றுள்ளார். பின்னர் நீண்ட நாள் காக்க வைத்து சிகிட்சை அளிக்காமல் நோயாளியை வீட்டிற்கு அனுப்பிியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் வலியோடு வீட்டிற்கு சென்றுள்ளார் இதுகுறித்து பாத்திமா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவரது வீடியோ பதிவை பார்ப்பவர்களுக்கு மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது. ஏழைகள் பயன்பட வைத்திருக்கும் அரசு மருத்துவமனை இவ்வாறான மருத்துவர்களின் பிடியில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இவ்வாறான அநியாயங்களை தட்டி கேட்டால், மருத்துவர்கள் தட்டிக்கேட்பவர் மீது, மருத்துவர்களை தாக்கி விட்டதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து அவர்களை சிறை யில் தள்ளி விடுகின்றனர். இதனால் யாரும் தட்டிக் கேட்பதும் இல்லை, தமிழக மருத்துவத்துறையோ, அரசோ நடவடிக்கை எடுப் பதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்ப டுத்தி வருகிறது. இவ்வாறான மருத்துவர்களை தேடி கண்டுபிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story