அதிமுக வாக்காளர்களை குறிவைத்து பெயர் நீக்கம் - ஜெயக்குமார்.

அதிமுக வாக்காளர்களை குறிவைத்து   பெயர் நீக்கம் - ஜெயக்குமார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

பாஜகவும், திமுகவும் பணத்தை நம்பி உள்ளது. அதிமுக அப்படி இல்லை அதிமுகவுக்கு வாக்களிக்கும் நபர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் நீக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசியவர், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் வேற்றி பெற போவதில்லை என்று தெரிந்து விட்டது. நாங்கள் எப்பொழுது பண நாயகத்தை நம்பி இல்லை. ஜனநாயகத்தை நம்பி தான் இருக்கிறோம். பாஜக மற்றும் திமுக பணத்தை நம்பி தான் இருக்கிறார்கள் பணத்தின் மூலம் வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என நட்பாசையில் உள்ளனர்.

இரு கட்சினரும், கொள்ளையடித்த பணத்தை தான் வாக்குக்கு கொடுக்கப் போகிறார்கள். பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு தேவையான வேட்பாளருக்கு வாக்கு செலுத்த உள்ளனர் வடசென்னையின் பொறுப்பாளராக நான் வடசென்னை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தேன். அதிமுக-விற்கு வாக்களிக்கும் நபர்களை குறி வைத்து வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் இந்த தேர்தலில் அது போன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். என்றார்.

Tags

Next Story