டெல்லி டூ சென்னை சைக்கிள் பயணம் - தோனியின் தீவிர ரசிகர் !!!!

டெல்லி டூ சென்னை சைக்கிள் பயணம் - தோனியின் தீவிர ரசிகர் !!!!

ரசிகர்

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோனியை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சைக்கிளிலேயே 2100 கிமீட்டர் பயணித்து சென்னைக்கு வந்துள்ளார்.

19 வயதான தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், டெல்லிலிருந்து சைக்கிளில் பயணித்து சென்னை வந்து, அவரைக் காண சேப்பாக்கம் மைதான வாயிலில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு கிமீட்டர் எதற்காகப் பயணம் செய்து வந்தீர்கள் என அவரைக் கேட்டால், 'ஒரே ஒரு போட்டோ, ஒரே ஒரு ஆட்டோ கிராஃப்' என்று சாதாரணமாக கூறினார்.

டெல்லி புறநகர் பகுதியைச் சேர்ந்தவரான கவுரவ், கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர். சென்னையில் நடைபெறும் போட்டியை நேரில் காணவும், தோனியை சந்திக்க வேண்டும் என்பதற்காகவும் தீவிர ஆவலில் இருந்து வந்தவர்.

அவர் சிஎஸ்கேவின் மஞ்சள் உடையை அணிந்தே பல மாநிலங்களைப் பயணித்துள்ளார். பீகாரிலிருந்து வந்த இந்த இளைஞர் சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகிலேயே சாலையில் கூடாரம் அடித்து இரவில் தங்கி உள்ளார்.

ஆனால் இவரிடம் அதற்கான பொருளாதார வசதி ஏதுமில்லை. இவரின் விருப்பத்தை தெரிந்துகொண்ட அவரது நண்பர்கள் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கு டிக்கெட் வாங்கித் தந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியைப் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கண்டு களித்தார்.

அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் அவர் ஊர் திரும்பியிருக்க வேண்டும். பின்னரும் அவர் டெல்லி திரும்பவில்லை. எம்.எஸ். தோனியை நேரில் சந்தித்த பிறகு செல்வேன் என அங்கேயே தங்கி விட்டார்.

ஒருவேளை அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நான் என்ன செய்வேன்? எப்படி நடந்துகொள்வேன் என்றே சொல்ல முடியாது என கூறினார். தோனி ரசிகரின் இந்த வெறித்தனமான செயல் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story