சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை....

சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை....

பாரத் ரயில்

தூத்துக்குடி - சென்னை இடையே 'வந்தே பாரத் ரயில்' இயக்க வேண்டும் வேண்டும்" என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் "தூத்துக்குடியிலிருந்து தினசரி மைசூரு, சென்னை ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏப்ரல் மே ஜூன் (2014) மாதங்களில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் முகமாக தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலையில் 'வந்தே பாரத் ரயில் தினசரி இயக்க வேண்டும். மேலும், காலையில் வண்டி எண் 056666 திருநெல்வேலி தூத்துக்குடி திருநெல்வேலி பெட்டிகளை வைத்து தூத்துக்குடி-மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு திருநெல்வேலி 'பாலருவி விரைவு ரயிலை'யும் உடனடியாக தூத்துக்குடி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண். 06125.06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி / வண்டி எண் 06885-06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் RVNL சார்பில் விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட மூன்று மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது. தூத்துக்குடி மேலூர் ரயில் நிலைய நிறுத்தம் வருகின்ற 1604 2024 வரைதான கொடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story