பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி  ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மாநகராட்சி தினக்கூலி தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர் நலச் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மாநகராட்சி தினக் கூலி தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, அவசர விடுப்பு, சாதாரணவிடுப்பு போர்க்கால விடுப்பு வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம், பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவம், உயர் கல்வி இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு தூய்மை பணியாளர் நலச் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலர் கோ.ஜெய்சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்ன பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்தராபதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், சட்ட ஆலோசகர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story