வேங்கிக்கால் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

வேங்கிக்கால் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

வேங்கிக்கால் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்

வேங்கிக்கால் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம் நடைபெற்றது
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் இடுக்குபிள்ளையார் கோயில் தெரு, தென்றல் நகர் முதல் தெரு ,நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் வழிகாட்டுதலின் பேரில் காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டி.ஆறுமுகம் சுகாதார ஆய்வாளர் அ.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் டெங்கு தடுப்பு கள பணியாளர்கள் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மற்றும் தீவிர கொசு புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். வேங்கிக்கால் ஊராட்சியில் 3 இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் மேநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல், குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல் குழிமுறை குடிநீர் பிடிக்கும் குழிகளை மூடுதல் டயர் போன்றவற்றினால் கொசுபுழுக்கள் உருவாகும் இடங்களை அழித்தல் வீடுகளை சுற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இதில் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன் ஊராட்சி செயலாளர் நாராயணன் மற்றும் உள்ளாட்சி பிரதநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story