தமிழகத்தில் மீண்டும் டெங்கு அபாயம் - 8 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை !!!

தமிழகத்தில் மீண்டும் டெங்கு அபாயம் - 8 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை !!!

டெங்கு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் அளிந்துள்ள நிலைகள் குறிப்பிட்டு 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகங்களை எச்சரித்துள்ளது.

அண்மைக்காலமாக கொசுக்கள் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு அதிகமாக பரவி வருகிறது. பருவ மழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய காலங்களில் கொசுக்களின் பெருக்கம் காரணமாக பரவும் அபாயம் அதிகரிக்கிறது.

திருப்பூர் ,கோயம்புத்தூர், மதுரை, தேனி ,நாமக்கல்,அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் போன்ற சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட செயல் திட்டம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேசியத் திட்டத்தின் கீழ் அனைத்து தலையீடுகளும் சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தினசரி காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும் ஒவ்வொரு நாளும் பின்வரும் அறிகுறிகளுடன் உள்நோயாளிகளின் வரிசை பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான காய்ச்சல் ,சொறி கொண்ட கடுமையான காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு, கடுமையான இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான என்செபாலிடிஸ், கடுமையான மந்தமான பக்கவாதம் மஞ்சள் காமாலை குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட அந்த அறிக்கை தினசரி IHIP போர்டலில் அப்டேட் செய்யப்படுகிறது.

கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் பணியை கிராம பஞ்சாயத்து டவுன் பஞ்சாயத்து நகராட்சி அல்லது மாநகராட்சி வார்டு என தினமும் கணக்கெடுக்கப்படும் மருத்துவமனை சார்ந்த நோய் தொற்றை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏடிஸ் லாவா கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story