மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி சுற்றுப்பயணம்!!

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி சுற்றுப்பயணம்!!

udhayanithi stalin

சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க மாவட்ட வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்லுக்கு தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அந்த தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று மெஜாரிட்டி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் ஓட்டு அதிகமாக உள்ளதால் பெண்களின் ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் தி.மு.க. கையாண்டு வருகிறது. அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் சுழல் நிதி வழங்கவும் இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுத்தேர்தலுக்கு இன்னும் 18 மாத காலமே உள்ளதால் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் சுமார் ரூ.90 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்மைச்சர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க உள்ளார். 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மாவட்டம் வாரியாக சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது போல், இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது. ஆயுத பூஜைக்கு பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story