கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்த பக்தர்கள்

விஜயதசமியை முன்னிட்டு டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கைகளில் கத்தியால் வெட்டிக்கொண்டு அம்மனை அழைக்கும் திருவிழா ஊர்வலம் நடந்தது.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்திபோடும் திருவிழா நடைபெறும்.சாய்பாபா காலனி உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ,தீசுக்கோ என்று பாடிக் கொண்டும்,ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.இதனால் பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.ஊர்வலமானது முக்கிய வீதிகள் மேட்டுப்பாளையம் சாலை பூமார்கெட் வழியாக வந்து டவுன்ஹாலில் உள்ள சௌடேஸ்வரி கோவில் வந்தடையும்.தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜை,திருக்கல்யாணமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story