ஆளுநர் மாளிகை புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு

ஆளுநர் மாளிகை புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு

டிஜிபி சங்கர் ஜிவால்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கடந்த 25.10.2023 அன்று கருக்கா வினோத் (42) ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து பெட்ரோல் கொண்டுகளை எறிந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023-ல் மருத்துவர் செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார். ஆனால் 25.10.2023-ல் நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார்படேல் சாலையில் நடத்தப்பட்டசெயலாகும். இந்த நிகழ்வில்புகாரில் தெரிவிக்கப்பட்டதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது எனவும், அவர்கள்அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர்மாளிகை வாயிற் காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும்அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல அத்துமீறி யாரும் நுழைய முற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படும்'' என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story