தர்மபுரி : வரத்து அதிகரிப்பால் மாம்பழங்களின் விலை சரிவு
தர்மபுரி மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் பல்வேறு பகுதிகளான அரூர் பாலக்கோடு பாப்பிரெட்டிப்பட்டி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெங்களூரா, நீலம், செந்தூரா, அல்போன்சா, பீத்தர் பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிக பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வேறு சில ரகங்களும் குறைந்த பரப்பில் நடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மா அறுவடை துவங்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, போச்சம்பள்ளி பகுதியில் இருந்து தர்மபுரி நகருக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் வர துவங்கியுள்ளன.தர்மபுரி மார்க்கெட்டில் செந்தூரா கிலோ 80 ரூபாய் நீலம் மற்றும் பங்கனப்பள்ளி 100 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் செந்தூரா கிலோ 100 ரூபாய்க்கும் பங்கன பள்ளி கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.