தில்லுமுல்லு பாஜக! ஈவிஎம் பிரதமர்! திருமா பேச்சு!
திருமாவளவன் பேச்சு!
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் ஒப்புகை சீட்டுகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, ''இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஏவிஎம் எந்திரத்தோடு 100% ஒப்புகை சீட்டையும் இணைத்து தேர்தலை நடத்த வேண்டும். அந்த ஒப்புகை சீட்டுகளை வாக்கு பெட்டியில் போடுவதற்கு உரிமை அளிக்க வேண்டும். அதனை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தக் கூடிய வகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்ததே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்த தான் வந்தது. வட இந்திய மாநிலங்களில் ஈவிஎம் இயந்திரங்கள் வேண்டாம் என போராட்டங்கள் வலியுறுத்தி வருகின்றன. விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் இன்னொரு புறம் ஜனநாயக சக்திகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவே கூடாது மீண்டும் வாக்குச்சீட்டு முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் ஆங்காக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி அவர்களை ஈவிஎம் பிரதமர் என்று அவர்கள் அழைக்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏவிஎம் கூடாது, ஒப்புகை சீட்டு இணைக்கப்பட்டால் மின்னணு எந்திரங்களை பயன்படுத்தலாம், இல்லையென்றால் பழைய முறையில் வாக்கு சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடைபெற வேண்டும் என ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு முழுவதும் விசிக நடத்தி வருகிறது." என கூறினார்.