கீழடியில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

கீழடியில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு

கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு குழிகளும் 2 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பத்தாம் கட்ட அகழ்வாய்வில் புதிய பொருள்கள் கண்டறியப்பட்டு வருவதால் தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே புதிய உற்சாகம் பிறந்துள்ளது .

Tags

Next Story