கொடுத்த பணத்தை தராததால் தகராறு - ஒருவர் கைது !
காவல்துறை
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதும் தராததால் தகராறு. இருவர் படுகாயம். ஒருவர் கைது. காவல்துறை நடவடிக்கை.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதும் தராததால் தகராறு. இருவர் படுகாயம். ஒருவர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வயது 45. இதேபோல புகலூர் தாலுக்கா, முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 57. பாலகிருஷ்ணனிடம் செந்தில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு ரூபாய் 10,000 கடன் பெற்று இருந்தார். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக மார்ச் 27 ஆம் தேதி காலை 6 மணி அளவில் திருக்காடுதுறையில் உள்ள செந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார் பாலகிருஷ்ணன். கடன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார் பாலகிருஷ்ணன். செந்தில் பணத்தை திருப்பி தரவில்லை. பாலகிருஷ்ணனுடன் முத்தனுூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் உடன் சென்று இருந்தார். செந்தில் பணம் தர மறுத்ததால் பாலகிருஷ்ணனும் ரமேஷும் செந்திலை தகாத வார்த்தை பேசி, கை மற்றும் தடியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் செந்திலுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக செந்திலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,பாலகிருஷ்ணனை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாலகிருஷ்ணன் உடன் வந்து தகராறு ஈடுபட்ட ரமேஷை கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story