தீபாவளி:கோபிநாதம்பட்டி சந்தையில் ரூ.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தீபாவளி:கோபிநாதம்பட்டி சந்தையில் ரூ.5 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஆடுகள் விற்பனை 

தர்மபுரி மாவட்டம்,கோபிநாதம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விலை அதிகரித்துள்ளது. இன்று சுமார் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காகவும் கால்நடை வளர்ப்புக்காகவும் வாங்குவதற்கு ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் குவிந்தனர். இதனால் வார சந்தையில் வழக்கத்தைவிட ஆடு, மாடுகள் வரத்தை அதிகரித்து இருந்தது. இன்றைய வார சந்தைக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளும் 2000 க்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் ஆடு ,மாடுகளின் விலை தீபாவளி பண்டிகை முன்னிட்டு விலை உயர்ந்து விற்பனையானது. ஆனால் சாரல் மழை பெய்தால் வெளியூரில் இருந்து வருகின்ற விவசாயிகளும் வியாபாரிகளும் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் சுமார் 2.5 கோடி அளவிற்கு, மாடுகள் ரூ.2 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றைய வார சந்தையில் சுமார் 5 கோடி அளவிற்கு விற்பனை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகளும் தெரிவித்தார்கள் ஆனால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு கால்நடைகள் விற்பனை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story