அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் - தேமுதிக மாவட்ட செயலாளர்கள்

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் - தேமுதிக மாவட்ட செயலாளர்கள்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள்

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்தான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில் தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணியில் இடம்பெற உள்ளது என்பது கேள்வியாகவே உள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும், சீட் விவகாரத்தில் பெரிய அளவு முரண்பாடு வைக்க வேண்டாம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பிரேமலதா விஜயகாந்த்திடம் பேசியுள்ளனர். அடுத்த வாரத்தில் முறையான பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story