வேட்பு மனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
கை சைகையால் முரசு சின்னத்தை கொட்டியதுபோல் அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
அரசியல் கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் .இதன் ஒரு பகுதியாக விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் சென்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.பின்னர் பிரச்சார வாகனத்தில் வேட்பாளரோடு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வானத்தில் நின்றபடி கை சைகையால் முரசு சின்னத்தை கொட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளில் நின்ற மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.