கருப்பு உடையில் வரவும் - பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்

கருப்பு உடையில் வரவும்  - பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தல்

 பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஆண் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆண்கள் கருப்பு நிற சட்டையும், கட்சி வேஷ்டியும், பெண்கள் கருப்பு நிற சேலையும் கட்டிவர வேண்டும் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் சீர்கேட்டை வழியுறித்தி வருகின்ற 25 தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்துகொள்ள வரும் அனைத்து கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் ஆண்கள் கருப்பு நிற சட்டையும், கட்சி வேஷ்டியும் கட்டிவரவேண்டும் பெண்கள் கருப்பு நிற சேலையும், ரவிக்கயும் அணிந்து வரவேண்டும். அன்றைய தினத்தை கருப்பு தினமாக குறிக்கும் வகையில் அனைவரும் கருப்பு உடையில் வந்து நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் வருபவர்கள் அனைவரும் கட்சி கொடி, பதாகைகளை ஏந்தி வரவேண்டும். பெருந்திரளாக குறித்த நேரதில் வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மிக சிறப்பான வெற்றி ஆர்ப்பட்டமாக நடத்தி தரவேண்டும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைவரும் மக்களுடைய பேராதரவை பெற மிக சிறந்த முறையில் இந்த ஆர்ப்பாட்டதை வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என கூறியுள்ளார்.

Tags

Next Story