நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் நாளை ஆலோசனை

கூட்டணி குறித்து ஆலோசனை
தேமுதிக கூட்டணி குறித்து ஆலோசிக்க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி குறித்து நாளை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார். இதில், தேமுதிக யாருடன் கூட்டணி குறித்து நாளை அடுத்த கட்ட முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவைத் தலைவர் இளங்கோவன் கட்சியின் துணைப்பொது செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் ஏற்கனவே நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 14 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் கட்சியுடன் தான் கூட்டணி என பிரேமலதா அறிவித்துள்ள நிலையில் நாளை உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
