ராஜ்யசபா சீட் : வெற்றிலை பாக்கு மாத்தியாச்சு - பிரேமலதா விஜயகாந்த்
பிரமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெற்றது.. எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மரியாதை நிம்மதமாக எங்களை சந்தித்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை கழகத்திற்கு வருவது குறித்து தெரிவித்தார்.திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த பொதுக்கூட்டத்தில் இருந்து பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது ஜெயலலிதா இல்லாத முதல் நாடாளுமன்ற தேர்தல் எடப்பாடி சந்திக்கிறார் விஜயகாந்த் இல்லாமல் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நான் சந்திக்கிறேன்.. 2011 ஆண்டு கூட்டணி எப்படி வெற்றி பெற்றதே அதேபோல் இந்த தேர்தலும் வெற்றி பெறுவோம் இரண்டு தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு இரண்டு கூட்டணி வெற்றி பெறும் தமிழ்நாடு பொருத்தவரை தினந்தோறும் வருமானவரித்துறை லஞ்ச ஒழிப்புத்துறை என்று பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம் தப்பு செய்தால் யாராக இருந்தாலும் நீதியரசர் மீது நிறுபனம் செய்ய வேண்டும் சோதனைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்பவர்கள் தான் அரசியலில் வர முடியும்.. ராஜ்சபா சீட் வழங்குவது குறித்து வெற்றிலை பாக்கு மாற்றி கொண்டோம். விரைவில் அதற்கான தேதி அறிவிப்போம். 25-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளோம் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். ராஜ்ய சபா பதவி வேட்பாளர்கள் யார் என்று நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை அனைத்து அரசியல் கட்சிகளும் நட்பு ரீதியாக தான் பழகி வருகிறார்கள். என்றார்.