தேமுதிகவினர் 20 பேர் மீது 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தேமுதிக
சென்னை அருகே போலீசாருடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 11) தேமுதிகவினர் பேரணி சென்றதால், அவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆலந்தூர் உதவி தேர்தல் அதிகாரி துளசிராமன் அளித்த புகாரின் பேரில் தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 7 பிரிவுகளில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Next Story