திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் - முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வர்த்தக அணி சார்பில் அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன் தலைமையில் இந்திராநகர் பகுதியில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, இன்பத்தமிழன், சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா முத்தையா, ராஜாவர்மன், மாவட்ட ஒன்றிய குழு பெருந்தலைவர் வசந்திமான்ராஜ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது, அதிமுகவிற்கு வயது - 52 பக்குவப்பட்ட இளைஞர் வயது. திமுக விற்கு வயது 75 - காங்கிரஸ்-ற்கு வயது 100.திமுக - காங்கிரஸ் தெருவை தாண்டுவதற்குள் எடப்பாடியார் ஜார்ஜ் கோட்டையை பிடித்து விடுவார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உளவுத்துறை சொன்ன கருத்துக்கணிபால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறக்கம் வரவில்லை அதிமுக- பாஜகவில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் விளங்குகிறார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. தூக்கம் போய்விட்டது.மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி திமுக ஆட்சிக்கு வந்தது. மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில் ஏமாற்றுகிறார்கள். திமுக நீட் தேர்வில் பித்தலாட்டம் செய்கிறது. 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பித்தலாட்டம். அனைத்து மகளிர்க்கும் உரிமை தொகை கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு இப்போது 40 சதவீதம் தான் கொடுத்து உள்ளீர்கள் 60 சதவீதம் கொடுக்கவில்லை.சொன்ன வாக்குறுதியை ஒன்றை கூட திமுக நிறைவேற்றவில்லை.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டு கேட்டு வருகிறார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக விற்கு சம்பட்டி அடி கொடுக்க வேண்டும் அதிமுக கூட்டணிக்கு யார் யார் வருகிறார்கள் என இன்னும் 2 மாதத்தில் தெரியும்.திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வர உள்ளது. கூட்டணி கட்சியை தக்க வைக்கவே திமுக போராடுகிறது.ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி - சட்டம் ஒழுங்கு சரியில்லை,பாதுகாப்பு இல்லை அரசு பலவீனமாக இருக்கும் காரணத்தில் இது போன்று நடைபெறுகிறது.சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால் திமுக அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். கவர்னர் ரவி என்பவர் பெட்டிக் கடை நடந்துபவரா,கவர்னர் மாளிகை பாதுகாப்பற்ற மாளிகையாக உள்ளது.ஸ்டாலின் தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் எம்ஜிஆர்,ஜெயலலிதா, எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.1991 ல் - தமிழகத்தை நம்பி வந்த ராஜிவ்காந்தி தற்கொலை படை தாக்குதலால் கொல்லப்பட்டார். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் தமிழகத்தில் வர வேண்டுமா? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.விலைவாசி உயர்ந்து மக்கள் மீது வரி சுமை உயர்ந்து விட்டது அண்ணா திமுகவில் போடப்பட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டு காலம் ஆகப்போகிறது என்ன செய்தார்கள் என்று விரல் விட்டு சொல்ல முடியுமா அரை மணி நேரத்தில் அண்ணா திமுக ஆட்சியில் எடப்பாடியார் 500 நலத்திட்டங்கள் செய்ததை சொல்லுவார் சட்டமன்றத்தில் அவர் குரல் கொடுக்கும் போது பதில் சொல்ல முடியாமல் திமுகவின் அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கரம் நீட்டி காட்டும் நபர் பிரதமராக வேண்டும் அல்லது அவரே பிரதமராக வேண்டும்.பச்சை தமிழன், விவசாயிகளின் ஒருவர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இந்தியாவில் ஒரு விவசாயி நாட்டை ஆள வேண்டும் என்றால் எடப்பாடியார் பிரதமராக வேண்டும்.நாட்டை ஆள 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற அனைவரும் வாக்களியுங்கள்.ஆட்சி அமைக்க எப்படி முடியும் என்று சொல்லுபவர்களுக்கு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பலமான மெஜாரிட்டி கிடைக்காது என்று உளவுத்துறை சொல்கிறது. அப்படி ஒரு நிலைமை வந்தால் அண்ணா திமுக முழுமையான வெற்றியை பெரும் பட்சத்தில் சக்கரம் எடப்பாடியார் கையில் தான் சுற்றும். அந்த நேரத்தில் அண்ணா திமுக இந்தியாவை ஆளும். அந்தத் தகுதியும் திறமையும் எடப்பாடியாருக்கு உண்டு. எந்த தேர்தல் வந்தாலும் உங்களுடைய பொன்னான வாக்குகளை எம்ஜிஆர் உழைப்பையும், இரத்தத்தையும் சிந்தி ஆரம்பித்து வளர்த்த அண்ணா திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் வளர்த்த இயக்கம் எடப்பாடி பழனிச்சாமி என்ற விவசாயி கையில் அண்ணா திமுக இருக்கிறது.அண்ணா திமுக டெல்லியை ஆள வேண்டும் அதற்குப்பின் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் அண்ணா திமுக ஆள வேண்டும் எடப்பாடியார் கையில் அதிகாரத்தை கொடுங்கள் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.